சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து..! எழுந்திருக்க முடியாமல் படுத்து கிடந்த அஜித் – வெளிவரும் உண்மை தகவல்.

நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் காதல் கலந்த திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் காதல் மன்னனாக வலம் வந்தார். பின்பு தனது ரூட்டை மாத்தி ஆக்ஷன் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்தார் இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக ஆண் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் அஜித்.

அந்த படங்களும் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை கொடுத்து சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் இன்றும் இவரது தன்னடக்கம் அமைதியை பார்த்து சினிமா பிரபலங்கள் முதற் கொண்டு ரசிகர்கள் வரை அஜித்தை ரோல் மாடலாக கொண்டு பலரும் வாழ்ந்து வருகின்றனர்.

நடிகர் அஜித் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்றவற்றில் அதிகம் ஆர்வம் காட்ட மாட்டார். இருந்தாலும் அஜித் ரசிகர்கள் அவரது திரைப்படம் வெளிவருகிறது என்றால் திருவிழா போல் தான் கொண்டாடி தீர்ப்பார்கள். தற்போது அஜித் இயக்குனர் ஹெச் வினோத் உடன் இணைந்து தனது 61வது திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் விக்னேஷ் சிவன் உடன் இணைய உள்ளார். இந்த நிலையில் அஜித் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த முக்கிய தகவல் ஒன்றை ஒரு பேட்டியில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் எகிறி பின்னால் குதிப்பது போன்ற ஒரு காட்சி எடுக்கப்பட்டது அதில் உண்மையாகவே அஜித் அப்படி செய்துள்ளார்.

அவர் பின்னால் விழும் போது அவரின் மண்டை கீழே இடிந்துள்ளது. அஜித்தால் எழுந்திருக்க முடியாமல் அப்படியே படுத்து விட்டார். உடனே அஜித் ஏதோ ஆகிவிட்டது என அவரின் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டார். பின்பு பத்து நிமிடம் ஐஸ் பேக்கை கழுத்தில் வைத்து அதன் பிறகு தான் எழுந்தாராம். இந்த செய்தி தற்போது வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன

Leave a Comment