திரும்ப வந்துட்டேன்னு சொல்லு குழந்தை பெற்ற பிறகு மீண்டும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.! வைரலாகும் புகைப்படம்

0

நடிகை எமிஜாக்சன் தமிழில் மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் தெறி தனுஷுடன் தங்க மகன், விக்ரமுடன் ஐ, ரஜினியின் டூ பாயிண்ட் ஜீரோ என பல திரைப்படங்களில் நடித்து வந்தவர். வழக்கமாக தமிழ் சினிமாவில் திருமணத்திற்க்கு பிறகு நடிப்பது மிகவும் அரிதான ஒன்றுதான், அதுவும் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் ஹீரோயின் அண்ணி, அம்மா, அக்கா கதாபாத்திரம் தான் கிடைக்கும். அதனால் பல நடிகைகள் தங்களது காதல் விவகாரத்தை இரகசியமாக பாதுகாப்பார்கள்.

ஆனால் இதை அனைத்தையும் முதலிலேயே உடைத்தவர் எமிஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்தார் எமி ஜாக்சன். இவர்கள் ஊர் சுற்றும் புகைப்படத்தை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் தைரியமாக இணையதளத்தில் வெளியிட்டார், மேலும் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பகிரங்கமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

amy
amy

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, மருத்துவமனையில் குழந்தை மற்றும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் குஷி ஆனார்கள், மேலும் இதைப் பார்த்த திரை பிரபலங்களும் எமி ஜாக்சனுக்கு வாழ்த்துக் கூறினார்கள்.

குழந்தை பிறப்பதற்கு முன்பே, தனக்கு ஆண் குழந்தை பிறக்கப் போவது ஆண் குழந்தை தான் என்றும், அக்குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என பெயரிட உள்ளதாகவும் பதிவிட, அது சோசியல் மீடியாவின் ஹாட் டாக்கானது. அதன் பின்னர் தனது செல்ல மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மட்டுமே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த எமி ஜாக்சன், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நல்ல அம்மாவாக அன்பு மகனை கவனித்து வந்த எமி ஜாக்சன், தற்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார். குழந்தை வளர்ப்பில் பிஸியாக இருந்த எமி ஜாக்சன், தான் மீண்டும் களத்தில் இறங்க தயார் என்பது போல் இன்ஸ்டாவில் போட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களை செம குஷியாக்கியுள்ளது.

amy
amy