பல கெட்டப்புகளில் அசத்தும் குந்தவை.! வெளியானது ps2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் …

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில்  கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வெளியாகி 400 கோடி மேல் வசூலித்து சாதனை படைத்தது.

கல்கியின் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இது ஒரு வரலாற்று கதை என்பதால் ரசிகர்களும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது இந்த நிலையில் தற்போது படத்தின் பிரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் அமைந்துள்ள சிறு காட்சிகளை வைத்து ஒரு வீடியோவை பட குழு வெளியிட்டு இருந்தது அதனைத் தொடர்ந்து. தற்போது மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரிஷாவின் கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் பல கெட்டபுகலில் உருவான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த வீடியோவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஒரு அப்டேட் படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரட்டிப்பாக்கி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த வீடியோ..

Leave a Comment