தொகுப்பாளினி அம்முவை நினைவிருக்கிறதா.! நீண்ட நாள் கழித்து படும் மாடலாக போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கிய அம்மு.!

0
ammu
ammu

ammu latest new look:தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமாவிலும் கால் தடம் பதித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தனர்.

தொகுப்பாளினி அம்மு சென்னையை பூர்வீகமாக கொண்டவர், இவர் தொகுப்பாளினியாக பணியாற்றியது மட்டுமல்லாமல் ஜெயா டிவி, சன் தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த பைரவி சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் இடமும் பிரபலமடைந்தது, அதன் பிறகு சினிமாவில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார், சினிமாவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகிய சரோஜா திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் தலை காட்டியுள்ளார் அதுமட்டுமில்லாமல் மலையாளத்திலும் கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என கூறப்படுகிறது, இவர் நடிப்பதை தாண்டி தொலைக்காட்சி மற்றும் சீரியல்களில் நடிகர், நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார், இப்படிப் சினிமாவில் பல வழிகளில் பணியாற்றியுள்ள இவர் சமீபகாலமாக எந்த தொலைக்காட்சிகளிலும் காண முடியவில்லை.

அதே போல் எந்த ஒரு திரைப்படத்திலும் காண முடியவில்லை, அப்படி இருக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படத்தை பார்த்தால் முன்பு அம்மு எப்படி இருந்தாரோ அதே இளமையுடன் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.