அஜித் படத்தை தயாரித்து தலையில் துண்டு போட்ட அமிதாப்பச்சன்.. எந்த படம் தெரியுமா.? ஆனால் பாடல்கள் அனைத்தும் ஹிட்

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித் சமீபகாலமாக சிறந்த இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் கூட 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.

இதனைத் தொடர்ந்து ஏகே 62  படத்தில் அஜித் நடிக்க மும்பரமாக இருக்கிறார். இப்படி வெற்றி படங்களை கொடுத்து வரும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்விய படங்களை கொடுத்திருக்கிறார் அப்படி ஒரு தோல்வி படத்தை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. 1977 ஆம் ஆண்டு ஜெடி ஜெர்ரி இயக்கத்தில் வெளிவந்த உல்லாசம் திரைப்படம்..

முழுக்க முழுக்க ஆக்சன், காதல் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்தது இதில் அஜித், விக்ரம், மகேஸ்வரி என பல திரைப்பட்டாளங்கள் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார் இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தாலும்.. படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறவில்லை.

இதனால் பெரிய தோல்வியை தழுவியது 50 லட்சம் பொருள் செலவில் உருவான இந்த திரைப்படம் வெறும் 30 லட்சம் மட்டுமே எடுத்து. இதில் பெரிய விஷயம் என்னவென்றால் இந்த படத்தை தயாரித்தது தற்பொழுது பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாபச்சன் என்பது தான் குறிப்பிடத்தக்கது. இவர் இந்த படத்தை தயாரித்து பல கொடியை காசு அள்ளலாம்  என நினைத்தார்.

ஆனால் 20 லட்சம் இவருக்கு நஷ்டம் மட்டும் தான் கிடைத்தது அதன் பிறகு இவர் கோலிவுட்ல எந்த ஒரு படத்தையும் தயாரிக்கவில்லை. இந்த படத்தில் விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது அருண் விஜய் தான். அப்போ அவர் இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க விரும்பவில்லை கூறினாராம்.. அதனால் அவருக்கு பதில் விக்ரம் நடித்தாராம். எது எப்படியோ படம் வெளிவந்து தோல்வியை தழுவியது.

 

Leave a Comment