மருத்துவமனையில் ஆக்சிஜன் செல்லும் பைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்.! காரணத்தைக் கேட்டு லத்தியால் வெளுத்து விட்ட போலீஸ்

கடந்த வருடம் தொடங்கியகடந்த வருடம் தொடங்கிய கொரோனா இன்றுவரை முடிவில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது கடந்த வருடம் முதல் அலை வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா இரண்டாம் கட்ட அலை வந்துள்ளதால் மக்கள் அனைவரும் ஊரடங்கு அமலில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டை விட அண்டை மாநிலம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும் இந்த கொரோனாவால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் கொரோனாவில் இருந்து மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என  மருத்துவர்கள் செவிலியர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என பலரும் நேரம் பார்க்காமல் பணியாற்றி வருகிறார்கள்.

அதேபோல் அரசு இவர்களை முன் களப்பணியாளர்கள் என கருதி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்கள். பொதுமக்களும் இவர்களின் சேவையை பாராட்டி. மருத்துவர், செவிலியர் ஆம்புலன்ஸ், ஓட்டுநர்கள் என இரவு பகல் பாராமல் சேவை செய்துவரும் நிலையில் தெலுங்கானாவில் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் செய்துள்ள விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சமீபத்தில் போலீசார் லத்தியால் ஒருவரை பின்னிப் பெடலெடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இது குறித்து வெளியான செய்தியில் தெலுங்கானா மாநிலம் நிசாம் பாத்  மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் திடீரென ஆக்சிஜன் பைப்பிலிருந்து ஆக்சிஜன் வராமல் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள் உடனே அது என்னவென்று பார்த்தால் ஆக்சிஜன் சப்ளை செய்யும் அறையில் ஆக்சிஜன் பைப் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்த நாச வேலையை யார் செய்தார்கள் என கண்காணிப்பு கேமரா மூலம் ஆராய்ந்து பார்த்தது மருத்துவமனை. அதன்பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தான் ஆக்சிஜன் சப்ளை துண்டித்து இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது பின்னர் அவரை பிடித்து விசாரித்ததில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்த மருத்துவமனையில் எந்த ஒரு மரணமும் நிகழவில்லை அதனால் காசு இல்லாமல் தவித்தேன் அதனால்தான் இவ்வாறு செய்தேன் என அவர் கூறியதை கேட்டு பலருக்கு அதிர்ச்சி ஆனது.

அதன் பின்னர் அந்த நபரை பிடித்து லத்தியால் போலீசார் வெளுத்து வாங்கினார்கள் பின்பு கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் போராடி வரும் நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் இவ்வாறு நடந்துகொண்டது பலருக்கு வேதனையை கொடுத்துள்ளது.

Leave a Comment