சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.!

0

இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் அம்பத்தி ராயுடு சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார், இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியில் சமீப காலமாக பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது, அதாவது இந்திய அணியில் நான்காவது பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவது என்பது தான் தற்போதைய பிரச்சனையாக இருக்கிறது இந்திய அணிக்கு, இதனால் இந்திய அணி பல சிக்கல்கள் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இந்த இடத்தில் ஆடுவதற்கு இந்திய அணியில் பலருக்கு போட்டி இருந்தது அதேபோல் ஆந்திராவை சேர்ந்த அம்பத்தி ராயுடுவும் இந்த இடத்தில் ஆடுவதற்கு தீவிர முயற்சியை எடுத்தார்.

நான்காவது பேட்ஸ்மேனாக யார் விளையாட தகுதியானவர் என சமீபத்தில் டெஸ்ட் செய்தார்கள் இதில் ராகுல், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, விஜய்சங்கர் என பலர் களம் இறங்கினார்கள். ஆனால் இந்திய அணியில் யாரும் மிடில் ஆர்டர் சரியாக விளையாடவில்லை, அதனால் இந்த உலகக் கோப்பை போட்டியில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு அப்போது அம்பத்தி ராயுடு 3d வீரர் என எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அம்பத்தி ராயுடு இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் அதேபோல் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் இதில் மூன்று சதங்களை அடித்துள்ளார் இந்திய அணிக்காக இவர் ஒருபோதும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.

அம்பத்தி ராயுடு வை இப்படி அடிக்கடி இந்திய கிரிக்கெட் வாரியம் புறக்கணித்து வருவதால் இதிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார், முக்கியமாக ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் இவர் இவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.