பற்றி எரியும் அமேசான் காடு பார்ப்பவர்களை கண்ணீர் வரவழைக்கும் காட்சி.!

0
amazon
amazon

அமேசான் காட்டில் கட்டுக்கடங்காத தீ பரவியதால் அமேசான் காடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, அதனால் விமானங்களின் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரேசில் நாட்டில் அமேசான் காடு அமைந்துள்ளது, இது உலக அளவில் மிகவும் பிரபலமான காடு, இங்குதான் அது அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைகள் இருக்கின்றன, அதேபோல் அரிய வகை விலங்குகளும் அதிகம் உள்ள காடு.

இந்த அமேசான் காடு பிரேசில் உள்ள கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா கயானா, பிரெஞ்ச் கயானா, ஆகிய நாடுகளில் பரவி காணப்படுகிறது ஆனால் பிரேசில் தான் அதிகமாக பரவியுள்ளது. ஆனால் சில நாட்களாகவே அமேசான் காடு தீப்பற்றி எரியும் செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு பெரிய காட்டு தீ பற்றி எறிந்தாலும் மீண்டு வரும் இந்த காடு, தற்பொழுது அரசியல் தீயிலும் தனிமனித பேராசை தீயிலும் ஏறிந்துகொண்டிருக்கிறது அதனால் இந்த காடு மீண்டு வருமா என பெரும் கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

அதே போல் காட்டில் வாழும் விலங்குகள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தவிப்பதும் தீயில் கருகி சிலையாக இருப்பதும் சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வெளியாகின இதை பார்ப்பவரை கண்கலங்க வைத்துள்ளது.