பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு லேடி கெட்டப்பில் மிரட்டிய நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்துகின்றனர்.  அதுவும் ஆக்சன் படங்களை தான் அதிகம் தேர்வு செய்து நடிக்கின்றனர் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் கமர்சியல் படங்களில் அசத்தியுள்ளனர் அப்படி நடிக்கும் போது பெண் வேடம் அணிந்தும் நடித்துள்ளனர் அப்படி நடித்த நடிகர்கள் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

kamal

உலக நாயகன் கமலஹாசன் : அவ்வை சண்முகி படத்திற்காக பெண் வேடம் அணிந்து நடித்தார். அந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.. காலம் கடந்த பிறகும் அந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் இன்றும் இருந்து வருகின்றன.

vishal

விஷால் : அவன் இவன் படத்தில் இன்றோ  சாங்கில் விஷால் பெண் வேடத்தில் தான் நடனமாடி இருப்பார் படம் முழுக்கவே அது போலவே தான் இவருடைய பேச்சு ஸ்டையில் இருக்கும்.

motta rajanedran

மொட்ட ராஜேந்திரன் : திருடன் போலீஸ் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் மொட்ட ராஜேந்திரன் போலீஸிடம் இருந்து தப்பிக்க பெண் கெட்டப்பில் நடித்திருப்பார்.

santhanam

சந்தானம் :  ஆல் இன் ஆல் அழகுராஜா  படத்தில் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஒரு படம் இந்த படத்தில் சந்தானம் பெண் வேடமடைந்து ஒரு விளம்பரப்படத்தில் நடிப்பார் மேலும் சில காட்சிகளில் அவர் பெண் வேடம் அணிந்து நடித்திருப்பார் அந்த காமெடி காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் :  ரெமோ படம் முழுக்க முழுக்க பெண் படம் அணிந்து நடித்திருப்பார் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வைரலானது.

surya

சூர்யா : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா அயன் படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் தென்படுவார் அப்படி ஒரு காட்சியில் பெண் வேடம் அணிந்து சூர்யா வந்து போவார் என்பது குறிப்பிடத்தக்கது.

vikram

விக்ரம் :  கந்தசாமி திரைப்படத்தில் ஒரு காமெடி கலந்த காட்சியில் பெண் வேடம் அணிந்து வந்து விக்ரம் மிரட்டி விட்டு போவார்.

Rajini

இதுபோல ரஜினி, பிரசாந்த், சத்யராஜ் போன்றவர்கள் பெண் வேடம் அணிந்து படத்தில் நடித்துள்ளனர் அதன் புகைப்படங்கள் கூட இதோ பாருங்கள்..

prashanth
sathyaraj
Exit mobile version