கோடை மழையை முத்தமிட்டு வரவேற்கும் அமலாபால்.! வைரலாகும் வீடியோ!!

உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி முதல் படத்திலேயே சில சர்ச்சையான கேரக்டரில் நடித்து தனது பெயரை டேமேஜ் செய்துகொண்டார்.

இதனையடுத்து அவர் 2010ஆம் ஆண்டு மைனா என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் தனது பெயரை சரி செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து அவர் தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனை, ஆடை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

எனவும் சமீபகாலமாக செயற்கையான விஷயங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு அவரே மாட்டிக் கொண்டு வருகிறார் என்பது நாம் அறிந்ததே. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இத் தடை ஏப்ரல் 14 வரை வைக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமலாபால் அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளவர்கள்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஒரு சில இடங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் வசித்து வரும் அமலாபால் அவரது வீட்டில் உள்ள மாமரத்தில் மாங்காய்க்கு முத்தமிடும் காட்சியும் மற்றும் பூனையை கொஞ்சும் காட்சிகள் என நம்மை மேலும் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் இந்த கிளைமேட்க்கு இது தேவையா என அறிவுரை கூறி வருகின்றனர்.

Leave a Comment