கட்டிபிடித்து முத்தம் கொடுத்து ரொமான்ஸில் மூழ்கிய அமலா பால்.! விடியோவை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். இவர் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் சர்ச்சையான விஷயங்களில் சமீபகாலமாக சிக்கிக் கொண்டிருப்பவரும் இவரே.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான அமலாபால் அவர்கள் 2009 ஆம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா திரை உலகில் அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த வீர சேகரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இருப்பினும் படம் பெரிய அளவிற்கு ஓடாததால் அதனைத்தொடர்ந்து சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து இருந்தார்.

அமலா பால் தொடர்ந்து கதையம்சம் சிறப்பாக இருக்கும் படங்களில் அவர் நடித்தார் மைனா, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை ,முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனரான விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் இவர்களது திருமணம் ஒரு வருஷம் கூட முழுவதும் நீடிக்காமல் பாதியிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

அதையடுத்து  படங்களில் நடிக்க தொடங்கிய அமலா பால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஆடை இப்படம் மக்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைபோல தனது சமூக வலைத்தளத்தில சர்ச்சையான விஷயங்களை வெளிப்படுத்தி  சிக்கிக்கொண்டு வருகிறார். இதனால் அவரை சர்ச்சை நாயகி எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் தனது  சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் அவரது தோழி பாட்டு பாட அமலாபால் அவரது முகத்தில் முத்தங்களை அள்ளி தெளித்தார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் லைக் போட்டு வந்தாலும், ஒரு சிலர் இவரை விமர்சித்தும் வருகின்றனர்.

Leave a Comment