பொன்னியின் செல்வன் வரலாற்று கதையில் நடிக்க மறுத்த அமலாபால் – மணிரத்தினம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையாம்..! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.?

0
manirathinam
manirathinam

தென்னிந்திய சினிமா உலகில் அண்மை காலமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் வரலாற்று மற்றும் உண்மை கதைகளை படமாக எடுக்கப்பட்டு வெளி வருகின்றன அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் தற்போது வரலாற்று கதை என பொன்னியின் செல்வன் கதையை ஒரு வழியாக பிரம்மாண்ட பொருள் செலவில் தற்போது உருவாக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் அதில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாகவே ரசிகர்களை கவர்ந்திருக்கும் வகையில் போஸ்டர் பாடல் டீசர் ட்ரைலர் என அனைத்தையும் வெளியிட்டு அசத்தியுள்ளது.

இந்த படக்குழு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் ஜெயம் ரவி கார்த்தி விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தை பெரிய அளவில் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலா பாலை நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டம் போட்டுள்ளார். ஆனால் பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படத்தில் அவர் நடிக்க முடியாது என கூறி விட்டாராம். இது குறித்த அண்மையிலேயே அமலாபால் சொல்லி உள்ளார்.

நான் மணி சாரின் பெரிய ரசிகை அவருடன் ஒரு  ஒரு படத்தின் ஆடிஷனுக்கு  சென்று இருக்கிறேன். ஆனால் அந்த முறையை நான் தேர்வாகவில்லை அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு அதே ப்ராஜெக்ட்டுக்கு என்னை அணுகினார். ஆனால் அதில் நடிக்க மெண்டல் ஸ்டேட்டில் நான் இல்லை அதனால் முடியாது என சொல்லிவிட்டேன் அதற்காக இப்பொழுது வருத்தப்படுகிறாள் என்று கேட்டார் இல்லை என்று தான் சொல்வேனா அமலா பால் கூறினார்.