ஷூட்டிங் ஸ்பாட்டில் புது பைக்கை அசால்டாக ஓட்டிய ஆலியா மானசா.! வைரலாகும் வீடியோ

சமீப காலமாக தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் படத்தின் பெயரை டைட்டிலாக வைத்து சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். அதன் மூலம் வெற்றியும் கண்டு வருகிறார்கள் அந்தவகையில் விஜய் தொலைக்காட்சி பல சீரியல்களை படத்தின் டைட்டிலை வைத்துதான் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களாலும் மக்களாலும் அதிகமாக பார்க்கப்பட்ட சீரியல் ராஜா ராணி இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் நடித்து வந்த ஆலியா மானசா அவர்களை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீரியலில் ஆலியா மானசா அவர்களுடன் நடித்த சஞ்சீவ் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் மகள் புகைப்படம் மற்றும் வீடியோவை சமீபத்தில்தான் சமூகவலைதளத்தில் வெளியிட்டார்கள் இந்த நிலையில் தன்னுடைய அழகான பெண் குழந்தைக்கு ஐலா என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த குழந்தை சென்ற வருடம் தான் பிறந்தது இந்த நிலையில் தற்பொழுது ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ராஜா ராணி 2 சீரியலை ரசிகர்களும் வெகுவாக பார்த்து மீண்டும் ஆல்யமானசாவை பார்ப்பதற்கு சான்ஸ் கிடைத்துள்ளதால் பலரும் இந்த சீரியலை கண்டுகளித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜா ராணி 2 சூட்டிங் ஸ்பாட் வீடியோவை ஆலியா மானசா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்  அந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

இந்த வீடியோவில் ஆலியா மானசா பைக் ஓட்டி அசத்தலாக வருகிறார்.  மேலும் இதைப் பார்த்த சீரியல் படப்பிடிப்பில் ஆலியா மானசா பைக்கில் உட்கார்ந்து இருக்கும் சித்துவை இன்சூரன்ஸ் போட்டு விட்டீர்களா என கலாய்த்து உள்ளார். இந்த வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment