ஆல்யா மானசா ராஜா ராணி – 2 சீரியல்களுக்காக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

விஜய் டிவி தொலைக்காட்சியில் செம ஹிட் ஆக ஒளிபரப்பப்பட்ட சீரியல் ராஜா ராணி. இந்த தொடரின் மூலம் சஞ்சீவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தன.

மேலும் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார் ஆலியா மானசா. இது தொடரில் அவருடன் நடித்து வந்த சஞ்சீவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய பெண் குழந்தை சென்ற வருடம் பிறந்தது.

பின்பு அவர் சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைத்து மறுபடியும் சீரியலில் கமிட்டாகி உள்ளார். ராஜாராணி சீசன் 1 தொடரை இயக்கிய பிரவீன் பெண்ணெட் தற்போது ராஜா ராணி சீசன் 2 தொடரை எடுத்து வருகிறார். இதில் ஹீரோயினாக ஆலியா நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகர் சித்து நடித்து வருகிறார். மேலும் இவரது கணவர் சஞ்சீவ் தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் கயல் இன்னும் புதிய சீரியலில் நடித்து வருகிறார். மேலும் ஆலியா மானசா தனது  இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதுபோக ஆலியா மானசா அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் புதுப்புது வீடியோக்களை அப்டேட் பண்ணி ரசிகர்களை செம ஜாலியாக வைத்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது நடித்து வரும் ராஜாரணி சீசன் 2 சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 13 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment