ஆலியா மானசாவின் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்.! வைரலாகும் கியூட் புகைப்படம்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த சீரியல், இந்த சீரியல் சமீபத்தில்தான் முடிவடைந்தது, இந்த சீரியலில் செம்பா கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்.

ரில் காதலராக இருந்த இவர்கள் நிஜ காதலராக மாறினார்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்த பொழுது இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது இணைந்து பேட்டிகள் கொடுப்பது என இருந்து வந்தார்கள் இந்தநிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவரும் தற்போது திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா ஒன்று நடைபெற்றது இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அனைவரின் முன்னிலையிலும் ஆலியா மானசா கர்ப்பமாக இருக்கிறார் என சஞ்சீவ் அறிவித்தார்.

இந்த நிலையில் ஆல்யமானசாவிற்கு சமிபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது இந்த நிலையில் தனது பெண் குழந்தையின் கியூட் புகைப்படத்தை சஞ்சீவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முறையாக வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்கு அனைவரும் வீட்டிலேயே இருங்கள் என கேப்டனாக கொடுத்துள்ளார்.

alya manasa daughter

Leave a Comment