100 படங்களுக்கு மேல் இசையமைத்தாலும் இந்த நடிகரின் படத்தால் தான் தனக்கு விருது கிடைத்தது.! இசையமைப்பாளர் டி. இமான் பெருமிதம்.

0

சினிமாவில் ஒரு படம் ஹிட் அடைய நடிகர் நடிகைகளை தாண்டி பின்புறமாக இருக்கும் இசையமைப்பாளர்களும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் கடினமாக உழைக்கின்றனர்.

ஆனால் படம் திரையரங்குக்கு வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்தால் மாபெரும் பெயரை பெறுவதை என்னமோ ஹீரோ-ஹீரோயின் தான்.

ஆனால் பின்புறம் அதற்கு வெற்றியாக இருக்கும் இவர்களை தற்போதுதான் மீடியாஉலகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் இசையமைப்பாளருக்கு தற்போது மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது மேலும் அவர்கள் என்னென்ன விருது வாங்கி உள்ளார்கள் எவ்வளவு சாதனை படைத்துள்ளார்கள் என்பது மக்கள் தற்போது தெரிந்து ஆச்சரியப்படுகின்றனர்.

அந்த வகையில் டி.இமான் விஜய் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தல அஜித் படம் வரை இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இவர் கடைசியாக இசையமைத்த அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மாபெரும் ஹிட்டடித்தது அதிலும் கண்ணான கண்ணே பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து இன்றளவிலும் ஃபேமஸான ஒரு பாடலாக இருக்கிறது.

இதற்காக விருது ஒன்று கொடுக்கப்பட்டது அதை குறித்து பேசிய சீமான் நான் விஜய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தல அஜித் படத்தில் விருது வாங்கினேன் என மகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் திரை உலக பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து சொல்லினர் அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்து தெரிவித்தார்.

அதுபோல அஜித்தும், விஜய்யும் தனிப்பட்ட முறையில் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி உள்ளனர் மேலும் அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து பிரபலங்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.