ஏற்கனவே ஹீரோ ஆனாலும் தளபதி65வது திரைப்படத்தில் மாசாக களமிறங்கும் பிக் பாஸ் பிரபலம்.!

அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்தான் இளைய தளபதி விஜய் இவரது  நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து தற்போது இயக்குனர் நெல்சனுடன் கை கோர்த்துள்ளார் நெல்சன் கோலமாவு கோகிலா,டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கி தளபதி 65 வது திரைப்படத்தை கைப்பற்றியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இசையமைப்பாளர் அனிருத் இந்த  திரைப்படத்திற்காக இசையமைக்க உள்ளார் அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் பூஜா ஹெட்டேக் நடிக்க உள்ளார் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் பூஜா ஹெட்டேக் பல வருடங்களுக்கு முன்பு முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் முதலில் எடுக்கப்பட இருந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்கள் ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரஷ்யாவில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே எடுக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வைரலாகி வந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைய உள்ளதாக கூறப்படுகிறது அந்த பிரபலம் யார் என்று கேட்டால் பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிய கவின் தான்.

kavin
kavin

இவர் ஏற்கனவே நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ஒரு தகவல் வைரலாகி வந்தது ஆனால் இவர் தற்போது தளபதி 65 திரைப்படத்தில் இணைந்து உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இதனை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment