அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா” திரைப்படம் – தமிழகத்தில் மட்டும் இரண்டாவது நாளில் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

puspa
puspa

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது புது விதமான கெட்டப்பில் அல்லு அர்ஜுன் இந்த படத்தில் நடித்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்த சமந்தா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப் படத்தில் புதிய கெட்டப்பில் நடித்து அசத்தி உள்ளனர். புஷ்பா திரைப்படம் தெலுங்கையும் தாண்டி மற்ற மொழிகளிலும் வெளியாகி அசத்தி உள்ளது தமிழிலும் நல்ல வரவேற்பு தற்போது புஷ்பா திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

முதல் நாள் மட்டுமே புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் 71 கொடி அள்ளியது தமிழகத்தில் மட்டும் குறிப்பாக புஷ்பா திரைப்படம் மற்ற டாப் நடிகர்களின் சாதனையை முறியடிக்கும் வகையில் முதல் நாள் மட்டுமே 4.10 கோடி அள்ளி புதிய சாதனை படைத்தது இரண்டாவது நாளும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதே போல இரண்டாவது நாள் வசூல் நிலவரமும் தற்போது வெளிவந்துள்ளது தமிழகத்தில் மட்டும் புஷ்பா திரைப்படம் 3.30 கோடி அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. ஓவர் ஆல் தமிழகத்தில் மட்டும் இந்த இரண்டு நாட்களில் மட்டுமே புஷ்பா திரைப்படம் 7.40 கோடி வசூல் சாதனை உள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் வேட்டை மட்டும் குறைந்தபாடில்லாமல் போய்க் கொண்டிருப்பதால் இன்னும் இருக்கின்ற நாட்களில் அசால்டாக 300 கோடியை இந்த திரைப்படம் ஆகும் என்பது புஷ்பா படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது.