ராக்கி பாய் போல பைக்கில் செம்ம மாஸ்ஸாக வரும் அல்லு அர்ஜுன்.! பட்டைய கிளப்பும் “புஷ்பா” படத்தின் ப்ரஸ்ட் லுக் போஸ்டர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லி அர்ஜுன் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் வெகு விரைவிலேயே அவர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடையத் தொடங்கினார் மேலும் சினிமா உலகில் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் நடித்துவரும் புஷ்பா திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. புஷ்பா திரைப்படம் ஒரு பாகமாக எடுக்க முடியாது என்பதால் இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஹீரோவாக நடித்து வந்த அல்லு அர்ஜுன் இதில் மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தை முட்டன்செட்டி உடன் இணைந்து மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தை மிக சூப்பராக சுகுமார் அவர்கள் எடுத்து வருகிறார் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத்துடன் மீண்டும் ஒருமுறை அல்லி அர்ஜுன் இணைந்துள்ளது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது இந்த இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 250 ரூபாய் 270 கோடி செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறது. படம் குறித்து பேசிய மைத்திரி மூவர்ஸ் நிறுவனம் : நாங்கள் எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் உயிர் பெற்று வளர்ந்து நின்று இருப்பதால் படத்தை இரண்டு பாகங்கள் வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம்.

இந்த கதையின் மூலம் திரையரங்கில் மறக்கமுடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார் மேலும் இந்தப் படம் இந்திய அளவில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது இதன் இரண்டாம் பாகம் அடுத்த வருடமும் 2022 ல் வெளிவரும் என குறிப்பிட்டனர்.

புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.

Leave a Comment

Exit mobile version