முதல்முறையாக இணையும் 6 முன்னணி நடிகர்களின் கூட்டணி.. இதில் யார் வெற்றி பெறுவார்.?

சினிமா உலகில் முன்பெல்லாம் வெற்றி இயக்குனருடன் தொடர  நடிகர்  விரும்புவது வழக்கம் ஆனால் தற்பொழுது நிலவுகின்ற சூழலே வேற  டாப் நடிகர்கள் புதுப்புது இயக்குனர்களுடன் கைகோர்க்கின்றனர் அப்படி முதல் முறையாக  இணையும் நடிகர், இயக்குனரை பற்றி இங்கே காணலாம்..

ரஜினிகாந்த் : ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் இணைந்து ரஜினி படம் பண்ண இருக்கிறார் அந்த படம் தான் தலைவர் 171 லோகேஷும், ரஜினியும் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கதையை இப்பொழுது எழுதி வருகிறார்.

கமலஹாசன்  : இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்னோடியாக திகழும் கமலஹாசன் ஹச். வினோத் உடன் கூட்டணி அமைத்து தனது 233 படத்தில் நடிக்க இருக்கிறார் இவர்கள் இணையும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது அந்த படம் கிராமத்து கதை சம்பந்தமான ஒரு படமாக இருந்தாலும் சோசியல் மெசேஜ் இருக்கும் என தெரிய பெறப்படுகிறது

விஜய் : தளபதி 68 படத்தின் மூலம் வெங்கட் பிரபுவும் விஜய்யும் முதல் முறையாக இணைகின்றனர் வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் மற்றும் படத்திற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகின்றனர் லியோ வெளியானதற்கு பிறகு அடுத்தடுத்து அப்டேட்கள் வரும் என தெரிவிக்கப்படுகிறது.

அஜித் :  விடாமுயற்சி படத்தில் நடிக்க போகிறார் இந்த படத்தை மகிழ் திருமேனி  இயக்குகிறார் இவரும், அஜித் இணையும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் படத்திற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சூர்யா  : முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து படம் பண்ணிவரும் சூர்யா வெற்றிமாறனுடன் இணைந்ததே கிடையாது இந்த கூட்டணி வாடிவாசல் படத்தின் மூலம் முதல் முறையாக இணைய இருக்கிறது அதற்கான வேலைகள் மும்புறமாக போய்க்கொண்டிருக்கிறது படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு மையமாக வைத்து உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

சிம்பு : மாநாடு, வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்பு தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கிறது தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார் இவர்கள் இணையும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.  டெஸ்ட் ஷூட் நேற்று சென்னையில் பாதுகாப்புடன் நடைபெற்றது