அனைத்து தொலைக்காட்சிகளிலும் சீரியல் முடக்கம் அதற்கு பதிலாக என்ன ஒளிபரப்புகிறார்கள் தெரியுமா.! இனி ரசிகர்கள் ஒரே குஷி தான்

சினிமா திரைப்படங்களை காண ரசிகர்கள் கூட்டம் இருப்பதுபோல் இரண்டு மடங்கு சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியலை காண ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள், அதிலும் டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் சீரியலுக்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் மவுசு குறையாது.

கொரோனா இந்தியா முழுவதும் பரவி வருவதால் தமிழ்நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது, இதனை தடுப்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது, அதேபோல் சீரியல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் எந்த சீரியல் படப்பிடிப்பும் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் பல தொலைக்காட்சி நிறுவனங்கள், அதனால் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி முதன்முதலில் சீரியலை நிறுத்தப்பட இருக்கிறார்களாம், சீரியல்கள் எடுக்க முடியாததால் பிக் பாஸ் சீசன் 3, சூப்பர் சிங்கர் 7, சரவணன் மீனாட்சி, kpy சிசன் 3, சின்னதம்பி சீரியல் போன்ற நிகழ்ச்சிகளை மீண்டும் ஒளிபரப்ப இருக்கிறார்களாம்.

அதே போல் மற்ற தொலைக்காட்சிகளும் சீரியலை நிறுத்த இருக்கிறார்கள் அதனால் தொலைக்காட்சி ரேட்டிங் மிகவும் அடிவாங்கும் என்பதால் எப்பொழுதும் ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்ள புதிய திரைப்படங்களை சின்னத்திரையில் ஒளிபரப்ப இருக்கிறார்களாம். கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் சின்னத்திரை மூலம் புதிய திரைப்படங்களை மக்களுக்கு ஒளிபரப்ப இருக்கிறதாம் பிரபல சேனல்கள்.

இனி புதிய படம் பார்க்க திரையரங்கு தேவையில்லை என்ற நிலைமை வந்து விட்டது.

Leave a Comment