சின்ன மீனைப் போட்டு தான் இந்த சுறாவை பிடிக்க வேண்டும்.! அமேசானின் ராஜதந்திரம்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் 144 தடை விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, இந்தத் தடை  ஒரு மதங்களை தாண்டி போய்க் கொண்டு இருக்கிறது இதனால் பல தொழில் துறைகள் முடங்கி கிடக்கின்றன.

அதேபோல் தினக்கூலி தொழிலாளர்கள், தொழில் செய்பவர்கள் மக்கள் என அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதேபோல் தமிழ் சினிமாவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, படப்பிடிப்பு, சீரியல் தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டு ஆயிரம் கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை அடைந்துள்ளது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க வட்டிக்கு வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு தான் விழும், ஏனென்றால் அவர்களுக்கு வட்டி குட்டி போட்டு மிகப்பெரிய தலைவலியாக உருவாகி மன அழுத்தத்தை கொடுக்கப் போகிறது, இந்த நிலையில் சில திரைப்படங்களை ஆன்லைனில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகிய தாராளப் பிரபு திரைப்படம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது, இதனை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள்வந்தாள் திரைப்படமும் ஆன்லைனில் வெளியிட இருப்பதால் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

படத்தை ஆன்லைனில் திரையிடவதால் திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் கோபத்தில் இருக்கிறார்கள் அதனால் இனி 2டி என்டர்டெய்ன்மென்ட் மூவி வெளியிடும் எந்த படங்களையும் திரையரங்கில் ஒளிபரப்ப மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் சூர்யாவின் திரை படத்தையும் திரையிட மாட்டோம் எனவும் முடிவெடுத்து உள்ளார்கள்.

ஜோதிகாவின் திரைப்படம் நாலரை கோடிக்கு எடுக்கப்பட்டு 9 கோடி வரை ஆன்லைன் வர்த்தகம் செய்து உள்ளது அதனால் படக்குழுவினருக்கு எந்த ஒரு சிரமமும் இல்லை, அதேபோல் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் ஆன்லைனில் வெளியாகும் நிலையில் இருக்கிறது, இது ஒருபுறமிருக்க இனி வரும் அனைத்து திரைப்படங்களும் ஆன்லைனில் வெளியிட பல திட்டங்கள் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன,.

இதனால் பலர் திரையரங்கங்கள் மூட படுவதற்கான வாய்ப்பு அதிகம் அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் மூலம் விடப்படும் ஒரு சில திரைப்படங்களை அடிமட்ட விலைக்கு கேட்கப்படுவதால் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது, இதனால் தமிழ் சினிமா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் இருக்கிறார்கள் பலரும், அதேபோல் ஒரு தனியார் நிறுவனம் நினைத்தால் தமிழ் சினிமாவை மொத்தமாக ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற பயம் அனைவரிடமும் வந்துள்ளது.

அதனால் இதற்கு ஒரு முடிவு விரைவில் எடுக்கவில்லை என்றால் திரையரங்கில் படங்கள் ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல் உருவாகும், கார்ப்பரேட் வைத்த பொறியில் ஜோதிகா மாட்டிக் கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் அதேபோல் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்தையும் சூரரைப்போற்று திரைப்படத்தையும் கோடிக்கணக்கில் விலை கொடுத்து ஆன்லைனில் வெளியிட  இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment