கோடி கோடியாய் சம்பளம் வாங்கிய பிரபலங்களுக்கு இனி ஆப்பு.! என்ன ஒரு ஆட்டம் இதுதான் சரியான ஆப்பு.!

கோடி கோடியாய் பணம் புழங்கும் சினிமா துறை தற்பொழுது கை கால் இன்றி முடங்கி கிடக்கிறது, சினிமா துறை பெரும் இழப்பீட்டை சந்தித்து வருவதாக கூறுகிறார்கள், கிட்டத்தட்ட ஆயிரம் கோடி இழப்புகள் ஏற்பட்டு வருவதாக சினிமாத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

50 கோடி முதல் 80 கோடி வரை சம்பளம் வாங்கும் பிரபல நடிகர்கள் தற்பொழுது வரை கொரோனா தாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவாமல் மொத்த பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் வரிப்பணம் கூட கட்டாமல் தயாரிப்பாளர்கள் தலையில் கட்டிவிட்டு முழு சம்பளத்தையும் முழுங்கி விடுகிறார்கள் முன்னணி ஹீரோக்கள்.

அதனால் இந்த கோரனாவை வைத்து அவர்களுக்கு பாடம் புகட்ட இருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கம், இதுவரை கொரானா பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சமும் சூர்யா சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் பெப்சி ஊழியர்களுக்கு 10 லட்சமும் கொடுத்து உதவி உள்ளார்கள்.

பல முன்னணி நடிகைகள் பல லட்சங்களை சம்பளமாக பெற்றாலும் இதுவரை யாரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவ முன்வரவில்லை, ஆனால் இதற்கு முன்னுதாரணமாக நடிகை நயன்தாரா 20 லட்சம் ரூபாய் நிதியாக கொடுத்துள்ளார், எப்படி மக்களுக்காக உதவிய சில கரங்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகர் அஜித்தும் 1.25 கோடி வரை நிதி உதவி செய்துள்ளார்.

பல கோடிகளை சம்பளமாக வாங்கும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்கள், என பலரும் இதுவரை எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள் அவர்களின் சம்பளத்தில் இருந்து 30% குறைப்பதாக தயாரிப்பு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தின் மக்களின் பணத்தில் இருந்து பல டிக்கெட் மூலம் பல கோடிகளை சம்பாதித்து தனக்கான சொத்துக்களையும் பணத்தையும் சேர்த்து வைத்துள்ள நடிகர்களுக்கு 30% சம்பள குறைப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

Leave a Comment