ராஜா ராணி 2 சீரியலுக்கு இப்படி தான் மேக்கப் போடுவேன் என்று சப்ரைஸ்சாக வீடியோவை வெளியிட்ட ஆலியா மானசா.! வைரலாகும் வீடியோ

0

பொதுவாக சின்னத்திரையில் ரீல் ஜோடிகளாக அறிமுகமான பல நடிகர் நடிகைகள் நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.

இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் பொழுதே இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார். ஆலியா மானசா கருப்பமாக இருந்ததால் சீரியலில் நடிக்காமல் இருந்து வந்தார். அதன்பிறகு இவர்களுக்கு ஜலா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.அந்த குழந்தையின் முதல் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்ள் அவ்வப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது.

மார்ச் மாதம் லாக் டவுன் நேரத்தில் வீட்டிலேயே இருந்த இவர்கள் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தால். அதில் கடந்த கால வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்கள். இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார் இதில் இவருக்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஆலியா ராஜா ராணி சீரியலில் எப்படி மேகப் போட்டு ரெடி ஆகிறார் என்பதை ஒரு வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.  அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.