வெள்ளி திரையில் இருப்பவர்கள் எப்படி ஃபேமஸ் ஆகிறார்களோ அதே போல சின்னத்திரையில் இருப்பவர்களும் தொடர்ந்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைகின்றனர் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ராஜா ராணி 1, 2..
சீரியல்களில் தொடர்ந்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஆலியா மானசா. ஆனால் முதலில் இவர் மானட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் விஜய் டிவி பக்கம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலியா மானசா ராஜா ராணி சீரியலில் நடித்தார். அப்போது தன்னுடன் நடித்த ஜோடியான நடிகர் சஞ்சீவி உடன் காதல் மலர்ந்து..
பின் இருவரும் வீட்டை எதிர்த்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் இருவருக்கும் தற்போது ஐலா மற்றும் அர்ஷ் என இரு குழந்தைகள் இருக்கின்றன அண்மையில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது இதனால் ராஜா ரணி 2 சீரியலில் இருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது பல்வேறு புதிய சீரியல்களில் கமிட் ஆகி உள்ளார்.
இருப்பினும் உடல் எடை அதிகரித்திருப்பதால் தற்போது குறைக்க அதிகம் தீவிரம் காட்டி வருகிறார் அதன்படி சீரியல் நடிகை ஆலியா மானசா இரண்டு மாதத்தில் மட்டுமே தற்பொழுது 10 கிலோ உடல் எடையை குறைத்து ஒரு புதிய லுக்கில் இருக்கிறார்.
இந்த 10 கிலோ உடல் எடையை குறைக்க அவர் ரொம்பவும் கஷ்டப்பட்டாராம் எப்படியோ ரொம்ப போராடி 10 கிலோ உடல் எடையை குறைத்ததற்காக அவரது கணவர் சஞ்சீவ் அவருக்கு சூப்பரான ஒரு பரிசையும் கொடுத்து அசத்தி உள்ளார் இதோ அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.