பிரசவத்திற்கு முன் இது எனக்கு வேணும் என அடம்பிடித்த ஆலியா மானசா.! ஆப்ரேஷன் தியேட்டருக்குள் இது ரொம்ப முக்கியமா.?

0
sanjeev aliya manasa
sanjeev aliya manasa

தற்பொழுது எல்லாம் சின்னத்திரையில் அறிமுகமான புதிய நடிகர் நடிகைகளாக இருந்தாலும் சில காலங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் ரீல் ஜோடிகளாக அறிமுகமான பல நடிகர் நடிகைகள் ரியல் ஜோடி மாறியவரிகளும் உள்ளார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகி நட்சத்திர தம்பதிகளாக மாறியவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா.

இவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் ஆல்யா மானசா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள் அதனையும் மீறி திருமணம் செய்து கொண்ட இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தொடர்ந்து புதிய சீரியல்களில் நடித்து வருகிறார்கள். ஆலியா மானசா ஒரு டான்ஸர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர் முதன்முதலில் கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

அப்பொழுது அங்னு மானஸ் என்பவரை காதலித்து சில காலங்கள் கழித்து அந்த காதல் தோல்வி அடைந்தது.  பிறகு சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஐலா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது பிறகு தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிரசவத்தின்போது ஆப்பரேஷன் தியேட்டருக்கு போவதற்கு முன் எனக்கு மேக்கப் கிட் வேணும் என அடம் பிடித்தாராம் ஏன் எனக் கேட்டதற்கு ஸ்டேட்டஸ் போடும்போது மேக்கப்போடு இருந்தால் தான் நல்லா இருக்கும் என கூறியுள்ளார் அதற்கு சஞ்சீவ் உள்ளே போனதும் நீயே மயங்கிவிடுவ உனக்கு எதுக்கு மேக்கப் என கூறி கிண்டலடித்துள்ளார்.