மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் ஆலியா-சஞ்சீவ் ஜோடி.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

சின்னத்திரையில் நடித்து வரும் அனைத்து நடிகர்,நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் ரீல் ஜோடிகளாக நடிக்க ஆரம்பித்து பிறகு இதன் மூலம் இவர்களுக்கிடையே காதல் ஏற்படுவதால் ரியல் ஜோடிகளாக மாறி விடுகிறார்கள் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர்கள் தான் நடிகை ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இதனை அடுத்து ஆலியா கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் நடிக்க முடியவில்லை அந்த வகையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு ஐலா என பெயர் வைத்தார்கள்.

அதன் பிறகு சில மாதங்கள் கழித்து தனது உடல் எடையை குறைத்து மீண்டும் சீரியலில் நடிப்பதை தொடர்ந்தார் அந்த வகையில் சின்ன திரையில் ராஜா ராணி 2 மூலம் ஆலியா மானசா மீண்டும் கதாநாயகியாக நடிப்பதை தொடர்ந்தார் ஒரு வருடமாக தொடர்ந்து மிகவும் பிஸியாக நடித்து வந்த இவர் மீண்டும் இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தினால் தற்பொழுது சீரியலில் நடிக்காமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இதன் காரணமாக ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது ஆலியா மானசா சீரியலில் நடிக்க வருவார்கள் என தொடர்ந்து மிகவும் ஆவலுடன் காத்து வருகிறார்கள். சீரியல் மூலம் பிரபமடைந்த ஆலியா சஞ்சீவ் ஜோடிகளை ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் டிஜிட்டல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தங்களுக்கு என உருவாக்கியுள்ளனர்.

அதற்கு காரணம் யூட்யூப் தான் இவர்கள் தொடர்ந்து நாள்தோறும் யூட்யூபில் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் எனவே சீரியல்களின் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் ஆலியா மானசாவை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள் இந்த நிலையில் தற்பொழுது ராஜா ராணி 2 500ஆவது எபிசோடு கொண்டாட்டத்தில் ஆலியா ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்துள்ளார்.மேலும் இந்த நிகழ்ச்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும் எப்பொழுது நீங்கள் சினிமாவில் நடிக்க தொடங்குவீர்கள் என்று கேட்டதற்கு தனது உடல் எடையை குறைத்துவிட்டு நடிப்பேன் என கூறி இருந்தார் மேலும் ஆலியாவும் அவரின் கணவர் சஞ்சீவும் சேர்ந்து விளம்பரம் ஒன்றில் ஜோடியாக நடித்துள்ளனர் அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் இந்த விளம்பரத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள் ஆலியா சஞ்சீவ் இருவரும் இணைந்து ஆச்சி மசாலா, ஜவுளிக்கடை,நகை கடை உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்துள்ளார்கள்.

Leave a Comment