யமஹா பைக்கை கெத்தாக ஓட்டும் ஆலியா மானசா.! இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா மானசா இந்த சீரியலின் இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் என்ற நடிகர் நடித்து இருந்தார். அந்த வகையில் ரீல் ஜோடிகளாக நடித்து வந்த இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் ரியலாக திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்தை மிகவும் சிம்பிளாக முடித்துக்கொண்டு சென்னையில் பிரம்மாண்டமான ஹோட்டலில் வரவேற்ப்பை தடபுடலாக நடத்தி இருந்தார்கள். திருமணத்திற்கு பிறகு சில மாதங்களிலேயே ஆலியா மானசா கர்ப்பமானதால் சீரியல்களில் நடிக்க முடியாமல் போனது எனவே சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார்.

தற்பொழுது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது அந்த குழந்தைக்கு ஐலா என பெயர் வைத்துள்ளார்கள். சமீபத்தில் தான் ஐலாவின் முதல் பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடி இருந்தார்கள். அவ்வபோது எடுத்துக்கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் கூட இணையதளத்தில் வைரலானது.

தற்பொழுது ஆலியா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்கள். அதில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

தற்பொழுது லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து வரும் ஆலியா மானசா FZ-S பைக் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டு தற்பொழுது தனியாகவே பைக் ஓட்டும் வீடியோவை தானே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளா.ர் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் FZ-Z பைக் ஓட்டும் சிங்கப் பெண் என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment