சின்னத்திரையை பொறாமைப்படும் அளவிற்கு சோசியல் மீடியா மற்றும் சீரியல் ஆகியவற்றில் மிகவும் பிசியாக இருந்து வருபவர்கள் தான் நடிகை ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்களின் ஜோடிக்கு என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும், அர்ஷ் என்ற ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் ஆலியா மானசாவின் குடும்பத்தினர்கள் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆலியா மானசா சஞ்சீவ் தான் வேண்டுமென்று வீட்டை விட்டு வந்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
ஆலியா மானசா சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார் அவருக்கு குழந்தை பிறந்த காரணத்தினால் அந்த சீரியலில் இருந்து விலகினார். மேலும் அந்த சீரியலின் சந்தியா என்ற கேரக்டரில் மிகவும் மாசாக நடித்து. இதனைத் தொடர்ந்து சஞ்சீவ் தற்பொழுது சன் டிவியின் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் இவர்கள் கொரோனா லாக் டவுன் நேரத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார்கள். அப்பொழுதிலிருந்து வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருந்த இவர்கள் ஐலா செய்யும் குறும்புகளையும் வீடியோவாக வெளியிட்டு தற்பொழுது லட்சக்கணக்கான ஃபாலோசர்களை வைத்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது சஞ்சீவ் கயல் சீரியலில் தற்பொழுது தங்கை கல்யாணம் எபிசோடு பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் திருமண எபிசோட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ஆலியா ஐலாவுடன் சென்று எல்லோருக்கும் ஹாய் மற்றும் பாய் சொல்லி அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் சஞ்சீவ்வுக்கு சப்ரைஸ் கொடுப்பதற்காக ஆலியா மானசா மற்றும் ஐலா இருவரும் சென்றதாக கூறப்படுகிறது.