தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் திரைப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அதே போல் மணிரத்தினம் திரைப்படத்தில் யார் நடித்தாலும் பெரிய ஆளாக வருவார்கள் என பலருக்கும் தெரியும், அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் 2000 ஆண்டு வெளியாகிய திரைப்படம்தான் அலைபாயுதே. இந்த படத்தில் மாதவன், ஷாலினி ஆகியோர் நடித்திருந்தார்கள் ரகுமான் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.
படத்தில் ஷாலினியின் சகோதரியாக பூரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்தான் ஸ்வர்ணமால்யா இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் அதன் பிறகு சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார் இவர் அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினியின் சகோதரியாக நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் இவர் 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர் அதன்பின் படங்களில் நடித்து வந்த சுவர்ணமால்யா பரதநாட்டியம் கற்றுக் கொண்டார், பின்பு 2017 ஆம் ஆண்டு சினிமா துறையை விட்டு விலகினார் இதற்கு காரணம் பிரபல தனியார் இணையதளம் என கூறினார்.

இந்த நிலையில் தான் இப்பொழுது பேராசிரியராக இருப்பதாகவும் நடனம் கற்று தருவதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார், மேலும் அவர் கூறியதாவது இனி படங்களில் நடிப்பதற்கு நேரம் ஒதுக்க தயாராக இல்லை எனவும் கூறினார்.

இந்த நிலையில் இரவரின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரளாகி வருகின்றன. இதோ புகைப்படம்.
