இரண்டாவது திருமணத்தை அறிவித்த ஏஎல் விஜய்.! சில நிமிடங்களிலேயே அமலாபால் பதிவிட்ட ட்விட்.!

0
al-vijay-amala-paul
al-vijay-amala-paul

 2007 ஆம் ஆண்டு அஜித் நடித்த கிரீடம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய், இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பொய் சொல்லப் போறேன், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதன்பிறகு 2014ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த நடிகை அமலா பால் திருமணம் செய்து கொண்டார், பிறகு திருமண வாழ்க்கை கசந்து விட்டதால்  இருவரும் மூன்றே வருடங்களில் விவாகரத்து பெற்றார்.

vijay
vijay

 தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள், அதேபோல் இவர்கள் இருவரும் மனஸ்தாபத்தால் தான் பிரிந்தார்கள் என கூறுகிறார்கள், விவாகரத்துக்குப் பிறகு இருவரும் அவரவர்கள் வேலையைப் பார்த்து வருகிறார்கள், இந்த நிலையில் அமலா பால் ஆடை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது அதேபோல்  விஜயம் பல படங்களை இயக்கி வந்துள்ளார்.

vijay-aishwarya
vijay-aishwarya

 இந்த நிலையில் ஏ எல் விஜய் தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் இதனால் பல பிரபலங்கள் முதல்  ரசிகர்கள் வரை வாழ்த்து கூறினார்கள், இந்த நிலையில் ஆடை படத்தில் நடித்து வரும் அமலா பால் விஜய்யின் திருமண அறிக்கை வெளியான சில நிமிடத்தில் அமலாபால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இது தான் தற்பொழுது சர்ச்சையை சந்தித்து வருகிறது.

 அந்தப் ட்வீட்டில்  நான் போராடுவேன், நான் நிலைத்து நிற்பேன், சின்ன தடையை பெரிய தடையோ, அதைவிட உயரமாக நின்று நிலைத்து காட்டுவேன் தடையை  நொறுக்கி தூக்கி விடுவேன் என்னுடைய பலம் தான் பெரிது நான் சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் நம்புகிறேன், இதுதான் நான் என பதிவிட்டுள்ளார்.