நச்சுனு நாலு ஹீரோயினை வைத்து திரைப்படம் இயக்க போகும் ஏ எல் விஜய்..! கதாநாயகிகள் பற்றி கசிந்த உண்மை..!

0
al-vijay
al-vijay

al vijay latest movie heroines: தமிழ் திரை உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் ஏ எல் விஜய். இவ்வாறு இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே  மிகத் தரமான கதையாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இருப்பதன் காரணமாக இவர் திரைப்படங்கள் எளிதில் ஹிட்டு கொடுத்து விடுகிறது.

அந்த வகையில் பிரபல நடிகர் மற்றும் மறைந்த முதலமைச்சரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பிறகு மற்றொரு திரைப்படத்தை இயக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

மேலும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் என்பவர் நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளாராம் இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகலா பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்கள்.

பொதுவாக ஓரிரு திரைப்படத்தில் மெகா ஹிட் கொடுத்த நடிகைகள் நடிகைகளின் திரைப்படம் வெளி வந்தாலே போதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். இந்நிலையில் பழம்பெரும் நடிகையாகவும் தமிழக அரசின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மட்டும் சும்மாவா.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படமானது இணையத்தில் வெளியாக வாய்ப்பே கிடையாது கண்டிப்பாக இந்த திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாகும் என இந்த திரைப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார் மேலும்  கொரோனா தொற்று காரணமாக திரைப்படத்தின் வெளியீடு தாமதமாவதன் காரணமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரு வெப் தொடரை இயக்க உள்ளாராம்.

இந்த திரைப்படமானது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் எனவும் இந்த திரைப்படத்தில் நான்கு முக்கிய நடிகைகளை நடிக்க வைக்கப் போவதாகவும் கூறியுள்ளார். அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் மஞ்சிமா மோகன் ரெபா மோனிகா மேகா ஆகாஷ் ஆகியோர்கள் நடிக்க உள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

nivetha pethuraj
nivetha pethuraj
manjima mohan
manjima mohan

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விசாகா என்பவர் நடிக்கவுள்ளாராம் இந்த திரைப்படம்  இணையத்தில் தான் வெளிவரப் போகிறது எனவும் இந்த திரைப்படத்தை குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

reba monika
reba monika
meha aaksh
meha aaksh