துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

0

விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் விஜய் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன் சுறா என சில தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார் அப்படி தோல்வி திரைப்படங்களை கொடுத்த விஜய் அவர்களை துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் தூக்கி விட்டவர் ஏ ஆர் முருகதாஸ்.

விஜய்க்கு துப்பாக்கி திரைப்படம் சினிமா திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது,  அதேபோல் துப்பாக்கி திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் காவலன், நண்பன் ஆகிய இரண்டு படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. மேலும் விஜய் ரீமிக்ஸ் திரைப்படங்களில் நடித்து வந்ததால் விஜயின் சினிமா வாழ்க்கைக்கு உறுதுணையாக இல்லை.

அதுமட்டுமில்லாமல் கதை தேர்வு செய்கிறார் என பல கேள்விகள் விஜய் மீது எழுந்தது அவை அனைத்தையும் சுக்குநூறாக உடைத்த திரைப்படம் தான் துப்பாக்கி. துப்பாக்கி திரைப்படம் 100 கோடி வசூலை பெற்று சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது துப்பாக்கி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது அக்ஷய் குமார் தான். துப்பாக்கி திரைப்படத்தின் கதையை முதலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இடம் கூறியிருந்தார் ஏ ஆர் முருகதாஸ்.

அந்த கதையை கேட்டுவிட்டு அக்ஷய்குமார் சம்மதம் தெரிவித்து விட்டார் ஆனால் ஒரு சில காரணத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டே போனது அதற்கு இடையில் விஜயிடம் கூறியுள்ளார் விஜய்க்கு கதை பிடித்துப்போக உடனே படத்தை எடுக்கலாம் என கூறிவிட்டார் ஆனால் ஏ ஆர் முருகதாஸ் அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரிய வில்லை உடனே அக்ஷய்குமார் அவர்களிடம் தமிழில் இந்த திரைப்படத்தை விஜய்யை வைத்து எடுக்கட்டுமா என கேட்டுள்ளார்.

அதற்கு அக்ஷய்குமார் உங்கள் விருப்பம் என கூறிவிட்டார் அதன் பின்பு விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படமும் செம ஹிட்டானது சில மாதங்கள் கழித்து முருகதாஸ் துப்பாக்கி திரைப்படத்தை ஹிந்தி ரீமேக்கான ஹாலிடே திரைப்படத்தை எடுத்த தொடங்கினார்.

Akshaya kumar
Akshaya kumar