அக்ஷய்குமார் உடல் ஆரோக்கியத்திற்காக இதை தினமும் குடிக்கிறார்.! அப்போ இந்த டீ எல்லாம் சாதாரணம்.

0

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய்குமார். இவர் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்துவதன் மூலம் இந்தியாவை தாண்டி உலக அளவில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.0 என்ற தரைப்படத்தில் அவருக்கு வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது அவர் ராகவா லாரன்ஸ் இயக்கிய ஒரு  புதிய திரைப்படத்திலும் தற்போது அவர் நடித்து முடித்துள்ளாதாக தெரிய வருகிறது.. இப்படி சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் மக்களுக்காகவும் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறா.

ர் அந்த வகையில் சமீபத்தில் திருநங்கைகளுக்காக பல கோடிகளை ஒதுக்கிக் கொடுத்து அனவைவரையும் சந்தோஷ படுத்தினர். இப்படி  சிறப்பாக வலம் வருகிறார். அக்ஷய் குமார் சமீபத்தில் சாகச நாயகன் பேர் கிரில்ஸ் நடத்தும் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவருடன் காட்டில் பயணத்தை வந்தபொழுது திடீரென யானையின் சாணத்தை எடுத்து அக்ஷய் குமாருக்கு அதில் டீ போட்டுக் கொடுத்தார்.

இந்த நிலையில் பிரபல நடிகையான ஹீமா குரேஷி, அக்ஷய குமார் மற்றும் பேர் கிரில்ஸ் ஆகியோர் லைவ் சேட்டில் கலந்து கொண்ட பொழுது நடிகை ஹூமா குரோஷி நீங்கள் அதை குடித்தீர்களா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு சற்றும் யோசிக்காமல் நான் தினமும் காலையில் மாட்டு கோமியம் தான் குடிக்கிறேன் அது உடல் நலத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பதால் அதனைக் குடித்தும் வருகிறேன் அதனால் இதுவும் பெரியதாக ஒன்றும் தெரியவில்லை எனவும் கூறினார். இவ்வாறு அக்ஷய் குமார் கூறியது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.