ஆர்சிபி அணி கண்டுக்கவே இல்ல.? என் திறமையை கண்டுபிடித்து மும்பை அணி தான் – ஆகாஷ் மத்வால் பேச்சு

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதன்படி ஐபிஎல் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக ஆரம்பித்தது.  ஆரம்பத்திலிருந்து பத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின இதனால் ப்ளே ஆப்க்கு எந்த அணிகள் செல்லும் என கணிக்கப்படவில்லை இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க ஒவ்வொரு அணியாக உள்ளே நுழைந்தது

அப்படித்தான் கடைசியாக ஆர்சிபி அணி தோற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு உள்ளே நுழைந்தது நேற்று   எலிமினேட்டர் ரவுண்டு சென்னையில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரிட்சை நடத்தியது டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது

முதலில் சிறப்பான ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் கொடுத்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர் இருப்பினும் 20 ஓவர் முடிவில் 182 ரன்கள் எடுத்து. இந்த இலக்கை லக்னோ அணி துரத்தியது ஆரம்பத்தில் விக்கெட்டை பறி கொடுத்தாலும் பாண்டியா மற்றும் ஸ்டோனிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்

அதன் பிறகு வந்தவர்கள் சொற்பொருள்களில் வெளியேற 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இதன் மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான  ஆகாஷ் மத்வால் தான். இவர் 3.3 பந்துகளில் ஐந்து ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது போட்டி முடிந்த பிறகு பேசிய ஆகாஷ் மத்வால்..

akash-madhwal-
akash-madhwal-

2019 ஆம் ஆண்டு ஆர் சி பி அணியுடன் இணைந்தேன் அங்கே எனது திறமையை வெளிப்படுத்த பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தேன் இங்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது கேப்டன் ரோகித் சர்மா என்னை அதிகம் ஊக்கப்படுத்தினார் எனது யார்கர் வீசும் திறமையை அறிந்து சரியான நேரத்தில் பந்து வீச அழைப்பார் என்று தெரிவித்துள்ளார். இப்படித்தான் படிப்படியாக வளர்ந்ததாக கூறினார்.

Leave a Comment