ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் பண்ணும் AK 61 படக்குழு – எப்போ தெரியுமா.? வெளியானது தேதி.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் இவர் தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை ஹச். வினோத் இயக்குகிறார். போனி கபூர் பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படம் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்த உடனே ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும்..

சில பைனான்சியல் விஷயம் காரணமாக படம் நீண்டு கொண்டு போனது ஒரு வழியாக மூன்று கட்டப்படிப்பு முடிந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு பாங்காங் செல்ல இருக்கிறது இதற்கிடையில் நடிகர் அஜித்குமார் லடாக் பயணம் மேற்கொண்டார் அதன் புகைப்படங்கள் வீடியோக்களும் பெரிய அளவில் வைரலாகின ஒரு வழியாக சென்னை திரும்பிவிட்டார்.

வெகு விரைவில் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என தெரிய வருகிறது. அஜித் இதில் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ஏகே 61 படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதே..

ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது இந்த நிலையில் நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் அஜித் அண்மைக்காலமாக V சம்பந்தப்பட்ட தலைப்பையே வைத்து வந்தார் ஆனால் இந்த படத்திற்கு அதை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ஏகே 61 படத்தின் தலைப்பு துணிவே துணை என இருக்க ..

அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இது தவிர இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவலை பட குழு இன்னும் அறிவிக்கவில்லை.

Leave a Comment