AK62 வில் இவுங்க தான் ஹீரோயின்..! பச்ச உடம்புகாரியை படத்தில் நடிக்க வைக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

தமிழ் சினிமாவில் தற்போது தளபதி விஜய்க்கு போட்டியான நடிகர் என்றால் அவர் தல அஜித் தான் அந்த வகையில் தல அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் ஒரே நாளில் போட்டி போட போவதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாவதை தொடர்ந்து தல அஜித் அவர்கள் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் அஜித் நடிக்க போகும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்குவது மட்டுமில்லாமல் இதில் நயன்தாரா தான் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திடீரென இந்த திரைப்படத்தில் நடிக்க போவது திரிஷா தான் என கூறியிருந்தார்கள் ஆனால் அதுவும் தற்பொழுது கிடையாதாம் நயன்தாராவும் இல்லை திரிஷாவும் இல்லை என்றவுடன் ரசிகர்களுக்கு கதாநாயகி பற்றிய விஷயத்தில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு வருகின்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணையத்தில் கசிந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் தல அஜித்திற்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் அவர்கள் நடிக்க இருப்பதாகவும் மேலும் இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்த நிலையில் ஏற்கனவே காஜல் அகர்வால் தல அஜித்துடன் விவேகம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ajith

மேலும் இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவது மட்டுமில்லாமல் இதனை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை பல நாட்களுக்கு முன்பாகவே புக் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எது எப்படியோ துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்துக்கு ஒரே வெற்றியாக தான் இருக்க போகிறது என பலரும் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

Leave a Comment

Exit mobile version