கடும் குளிரில் கையை கட்டிக்கொண்டு தயாரிப்பாளரிடம் பேசும் அஜித் – புகைப்படத்தை பார்த்து வருத்தப்படும் AK ரசிகர்கள்.

நடிகர் அஜித்குமார் தனது 60வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை பல்வேறு தடைகளை தாண்டி இயக்குனர் வினோத் சிறப்பான முறையில் படத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் வலிமை படத்தையும் தயாரித்து உள்ளார். இதற்காக மிகப் பிரம்மாண்ட பட்ஜெட் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வலிமை திரைப்படம் தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது இதனால் முதல் நாள் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற இருக்கிறது.

மேலும் வலிமை படம் முதல் நாளில் அதிகாலை ஒரு மணிக்கு காட்சியை திரையரங்கில் ஒளிப்பரப்ப படக்குழு பேசி வருகிறது அப்படி வெளியாகும் பட்சத்தில் முதல் நாள் மட்டும் வலிமை திரைப்படம் அனைத்து திரையரங்கிலும் 1மணிக்கு ஒளிபரப்பப்படும் அதனால் முதல் நாள் மட்டுமே எதிர்பார்க்காத ஒரு வசூல் வேட்டை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நடிகர்களின் ரெக்கார்டு உடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை  படத்திலிருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அம்மா பாடல், வேற மாதிரி பாடல் மற்றும் வலிமை படத்திலிருந்து பல்வேறு புகைப்படங்கள் கசிந்த நிலையில் இன்று இப்படத்தின் டிரைலர் வருவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தயாரிப்பாளர் போனிகபூர் இன்ஸ்டா பக்கத்தில் குடியேறினார்.

இந்த நிலையில் அவர் அஜித்துடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு சில பதிவுகளை  போட்டு உள்ளார். அதில் அவர் கூறியது இதே நாள் கடந்த ஆண்டு குளிரில் நானும், அஜித்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் குளிரில் அஜித் கை கட்டிக்கொண்டு போனி கபூருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தற்போது உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment