நடிகர் அஜித்குமார் கலந்த சில வருடங்களாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார் அந்த வகையில் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் தொடர்ந்து மூன்று படம் பண்ணினார் அதில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது.
அதன் காரணமாக உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் வசூலில் அள்ளி வருகின்றன இதனால் படம் பிளாக்பஸ்டர் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் சூப்பராக ஓடிக் கொண்டும் இருக்கிறது. அதை தொடர்ந்து அஜித் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே சொல்லப்பட்டது.
ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன கதை லைகா நிறுவனத்திற்கு பிடிக்காததால் அவரை தூக்கி விட்டு பதிலாக ஏகே 62 திரைப்படத்திற்கு இயக்குனர் மகிழ் திருமேனியை போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இயக்குனர் மகிழ் திருமேனி லண்டனுக்கு சென்று லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.
அது சுமுகமாக முடிந்ததை எடுத்து அவருக்கு 50 லட்சம் அட்வான்ஸ் தொகை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வெகு விரைவிலேயே இந்தக் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் இயக்குனர் மகிழ்திருமேனி தற்பொழுது படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், கேமராமேன் என ஒவ்வொருவரையும்..
பார்த்து பார்த்து தட்டித் தூக்கும் முயற்சிகள் இருக்கிறாராம்.. இப்பொழுது சில தகவல்களும் வந்துள்ளது நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்க இருக்கிறாராம். மேலும் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக இளம் நடிகை அதிதி ராவ் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் சொல்லப்படுகிறது.