பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் AK 62.. அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை

0
ajith
ajith

அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதுவரை மட்டுமே தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் அருகே உள்ளது உலக அளவில் 150 கோடிக்கு மேல் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இன்னும் பல இடங்களில் வசூல் அள்ளி வருவதால் நடிகர் அஜித்தும் சிரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தது ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்ச அளவில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்தன இப்படி இருக்கின்ற நிலையில் ஏகே 62 திரைப்படம் குறித்து பல்வேறு அப்டேட்டுகள் வெளிவந்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஏகே 62 திரைப்படம் மிகப்பிரமாண்ட  200 கோடி மதிப்பில் உருவாக உள்ளதாம்.

அஜித் கேரியரில் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் ஏ கே 62 என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தில் நடிக்க அஜித்துக்கு சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இது தவிர இந்த திரைப்படத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் நடிகைகள் வரை பலர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க சாய் பல்லவி உடன் தற்பொழுது படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் வெகு விரைவிலேயே அதற்கான அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பத்திலேயே தொடங்கும் என சொல்லப்படுகிறது அஜித்துக்கான காட்சிகள் மும்பை மற்றும் சென்னை பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாம்.