வந்த வேகத்திலேயே “அஜித்தை” திருப்தி படுத்திய மகிழ்திருமேனி.. தாறுமாறாக உருவாகும் ஏகே 62

0
ajith
ajith

துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் உடனே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் AK 62 படம் பண்ண போகிறார் என்ற தகவல் ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறிய கதையை திருப்தி கொடுக்காததால்..

அவரை தூக்கி எறிந்து விட்டு வேறு இயக்குனர்களை தேடும் பணியில் லைகாநிறுவனம் இறங்கியது. ஒரு வழியாக இளம் இயக்குனர் மகிழ் திருமேனி சொன்ன ஆக்சன் கதை ரொம்ப பிடித்துப் போவது உடனே ஓகே சொன்னது.. அதோட மட்டுமல்லாமல் வெகு விரைவிலயே ஷூட்டிங் ஆரம்பித்து..

தீபாவளிக்கு படைத்தை ரிலீஸ் செய்ய முடியும் என இயக்குனர் மகிழ் திருமேனி சொன்னதாலேயே அவரை இந்த படத்தில் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஏகே 62 படத்தின்  ஷூட்டிங் வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே ஆரம்பிக்க மகிழ்திருமேனி முடிவெடுத்துள்ளாராம்.. மேலும் இப்போதே படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகளை தேடும்படியில் மகிழ்ச்சி களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் மகிழ் திருமேனிக்கு லைகா நிறுவனம் ஒரு ஆபீஸ் கூட போட்டு தரவில்லையாம் இருப்பினும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல்.. ஆபீஸ் இல்லை என்றாலும் பரவாயில்லை  என நினைத்து தன்னுடைய ஆபீசுக்கு சென்று ஏ கே 62 படத்தின் வேலைகளை பார்த்து வருகிறாராம் இவருடைய வேகத்தை பார்த்த அஜித் மிரண்டு விட்டாராம்..

இப்படிப்பட்ட ஒரு இயக்குனருடன் படம் பண்ண ரொம்ப ஆவலாக இருக்கிறாராம்..  இதை கேட்ட தல ரசிகர்கள் ஏகே  62 திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக என்பதில் எந்த மாற்று கருதும் இல்லை என சொல்லி கமெண்ட் அடித்து வருகிறன்றனர். மேலும் துணிவு படத்தின் ஆக்சனை விட இந்த படத்தில் அதிகம் இருக்கும் என சொல்லி வருகின்றனர்.