அஜித் பிறந்தநாளில் ஏ கே 62 முக்கிய அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் படக்குழு.?

தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் நடித்த துணிவு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் அடுத்ததாக தனது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்க இருந்ததாக கூறப்பட்டது ஆனால் தற்பொழுது ஜூன் மாதத்தில் தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.பொதுவாகவே நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்றால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆரவாரம் செய்து விடுவார்கள்.

குறிப்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் அன்று மற்றும் இணையதளம் முழுவதும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளிற்க்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருவார்கள் இந்நிலையில் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏ கே 62 திரைப்படத்தின் தலைப்பை பட குழு வெளியிடப் போவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பல பிரபலங்களும் கூறி வருவதாகவும் இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை தொடர்ந்து பார்த்தால் ஒரு சில ரசிகர்கள் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியிடுவதற்கு.

ajith

அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறிவரும் நிலையில் பல ரசிகர்களும் அஜித்தின் பிறந்தநாள் முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வெளியிட்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version