ஏகே 62-ல் மகிழ் திருமேனியும் கிடையாது.! அப்போ யாருதான் இயக்க போறாங்க.?

0
ak-62
ak-62

தற்போது வந்த தகவலின் படி அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனியும் இயக்க போவதில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்குவதாக இருந்தது ஆனால் அவருடைய கதை நடிகர் அஜித்திற்கு பிடிக்காததால் கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறியிருந்தார் ஆனால் விக்னேஷ் சிவன் அலட்சியமாக இருந்ததால் உச்சகட்ட கோபத்தில் இருந்த அஜித் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கப் போவதில்லை என்று தற்போது கூறப்படுகிறது. அப்போது யார் தான் ஏகே 62 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் பிரபல இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது நடிகர் அஜித்தின் 50-வது படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் படமாக கொடுத்தவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு.

இவர்தான் 11 வருடங்கள் கழித்து தற்போது அஜித் உடன் இணைந்து ஏகே62 திரைப்படத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மங்காத்தா படத்தில் இரண்டாவது பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் மகிழ் திருமேனி அவர்கள் சமிபத்தில் லண்டனீருக்கு அஜித் இடமும் லைக்கா நிறுவனத்திடமும் கதையை கூறி இருக்கிறாராம் ஆனால் இந்த கதை அஜித்திற்கு பிடிக்காததாள் இயக்குனர் மகிழ் திருமேனியை ரிஜெக்ட் செய்து விட்டதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் தற்போது மறுபடியும் வெங்கட் பிரபு உடன் இணைய உள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சமீப காலங்களாக இயக்குனர் வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் மங்காத்தா படத்தில் இரண்டாவது பாகம் குறித்த கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது அப்போதெல்லாம் கதையை ரெடி செய்து விட்டு அஜித்தை சந்திக்கலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது உன்னநியானா தகவலாக வெளியாகவில்லை. அதுமட்டும் இல்லாமல் ஏகே 62 திரைப்படத்தை இயக்க வெங்கட் பிரபுவை லைக்கா நிறுவனத்தின் உறுப்பினர் சிபாரிசு செய்து உள்ளதாக கூறபடுகிறது. இதை அஜித் ஏற்றுகொல்வாரா மாட்டாரா என்று தெரியவில்லை.