AK 61 படத்தில் போலீசாக நடிக்கும் “முக்கிய ஹீரோ” – இணையதளத்தில் கசிந்த புகைப்படம்.!

நடிகர் அஜித்குமார் அண்மைக்காலமாக நடிக்கும் திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் நல்ல வேட்டை நடத்தி வருகிறது அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கூட 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பட குழு ஒவ்வொன்றையும் சரி செய்து சூப்பராக இந்த படத்தை எடுத்து வருகிறதாம்.

ஹச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றி வருகிறார்.படத்தில் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். AK 61 படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகுவதால் படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது.

இந்த படத்தில் அஜித் உடன் கைகோர்த்து வீரா, சமுத்திரக்கனி, ஜான் கோக்கேன், மஞ்சு வாரியர் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். முதல் கட்டப்பட்ட படிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு அஜித் இல்லாமல் மற்ற நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவிலேயே அஜித் இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஏகே 61 திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் அஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது அதன் புகைப்படம் கூட தற்பொழுது இணையதள பக்கத்தில் கசிந்து உள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

ajith 61
ajith 61

Leave a Comment