அஜித் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பரான அப்டேட்டை கொடுக்க காத்து இருக்கும் AK 61- எதிர்பார்ப்பில் ஏங்கித் தவிக்கும் ரசிகர்கள்.!

நடிகர் அஜித்குமார் சினிமாவுலகில் தனது பயணத்தை தொடங்கிய நாளில் இருந்து வெற்றி/ தோல்வி படங்களை கொடுத்து வருகிறார் இருப்பினும் ரசிகர்கள் அஜித்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதால் நாளுக்கு நாள் அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அதற்கு ஏற்றார்போல அஜித்தும் தற்போது சிறந்த இயக்குனரிடம் கதையை நன்கு அறிந்து கொண்டு நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை, நேர்கொண்டபார்வை, விசுவாசம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது மீண்டும் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த பாடத்தை வெறும் 75 நாட்களிலேயே எடுத்து முடிக்க வேண்டும் என அஜித் கட்டளையிட்டு உள்ளதாக கூறப்படுகிறது இதனால் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விருவிருப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அஜித் டபுள் ரோலில் நடிக்கிறார் என்றும் செய்திகள் உலா வருகின்றன இளமையான தோற்றம் ஒன்றிலும் வயதான தோற்றத்தில் நடிக்கிறாராம்.

இந்த படம் பேங்க் ராபரி வைத்து உருவாகி இருக்கிறது இந்த படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோயின்கள் ஒன்று ரகுல் பிரீத் சிங் மற்றொன்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துடன் நடித்த தபு நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் உலா வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே 1 -ம் தேதி AK- 61 படத்தின் டைட்டிலில் என்னவென்பதை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இதனால் அஜீத் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் காத்து இருக்கின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment