இளம் ஹீரோவுக்கு வாய்ப்பு கொடுத்த AK 61 – மாஸ் காட்டும் படக்குழு.!

நடிகர் அஜித்குமார் கடைசியாக வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்தப்படத்தை ஹச். வினோத் இயக்கி இருந்தார். பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இரண்டு வருடங்கள் கழித்து பிப்ரவரி 24ஆம் தேதி உலக அளவில் படம் ரிலீசானது.

முதல் முறையாக அஜித்தின் வலிமை திரைப்படம் தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு படம் ரிலீசானது. இதனால் படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என படக்குழு கணக்கு போட்டது ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லாததால் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்று படம் ஓடியது.

இருப்பினும் அதிக வசூல் ஈட்டியது சொல்லப்போனால் 200 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்ததை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் போனி கபூர் சொன்னார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இந்த வருடம் இன்னொரு சிறப்பான படத்தை கொடுக்க அஜித் மூன்றாவது முறையாக ஹச். வினோத்துடன் இணைந்து தனது 60வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது இந்த படத்தில் அஜித்தை தவிர வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்பது இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வமாக சொல்லாமல் இருப்பதால் பல பெயர்கள் அடிபடுகின்றன. அதில் ஒன்றாக அஜித்தின் 61 வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பல பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல இந்த படத்தில் இன்னொரு நடிகரும் இணைந்து உள்ளனர் அந்த நடிகர் வேறு யாருமல்ல ராஜதந்திரம் படத்தில் ஹீரோவாக நடித்த வீரா இந்த படத்தில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

veera
veera

Leave a Comment