AK 61 : படத்தின் கதை இதுவா.? அடுத்த மங்காத்தா போல இருக்கு.. வியப்பில் ரசிகர்கள்.

நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டு சமூக அக்கறை மற்றும் ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விசுவாசம், நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

அதனை தொடர்ந்து இயக்குனர்  ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் கதைக்காக நடிகர் அஜித்குமார் அதிரடியாக உடல் எடையைக் குறைத்தார்.

அதன் புகைப்படங்கள் கூட இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் 61 வது படத்தின் பூஜை போடப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் 19ம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இதற்கான வேலைகளை செய்து வருகிறதாம்.

அதேசமயம் இந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகளையும் தேர்வு செய்து வருகின்றனர். அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் நடிகைகள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் அஜித் படத்தில் டாப் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்தின் 60 வது திரைப்படமான இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க பேங்க் ராபரி வைத்து எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது அஜித் கேரியரில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் அதேசமயம் அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கிறார். இந்த படம் அடுத்த மங்காத்தா போல் இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Leave a Comment

Exit mobile version