AK 61 படத்தை ரிவர்ஸ் கியர் போட்டு எடுக்கும் ஹச். வினோத்.! ஓகே சொன்ன அஜித்.

ajith-
ajith-

நடிகர் அஜித்குமார் ஒரு இயக்குனரை நன்கு வளர்த்திட வேண்டும் என்பதற்காக அவருடன் தொடர்ந்து பயணிப்பது வழக்கம் அந்த வகையில் சிறுத்தை சிவா, விஷ்ணு வர்தன் என பல இயக்குனர்களிடம் சொல்லிக்கொண்டே போகலாம் அதேபோல தற்போது இளம் இயக்குனர் ஹெட்ச் வினோத்துடன் கூட்டணி அமைத்து தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் இதுவரை நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய படங்களில் பணியாற்றி உள்ளனர் தற்போது மூன்றாவது முறையாக இணைந்து AK 61  படத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமான முறையில் பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

என தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து இருந்தாலும் வயதான தோற்றத்தில் தான் தெரிகிறார் அதனால் நிச்சயம் இந்த படத்தில் அஜித் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஹெச் வினோத் ஏற்கனவே அஜித்திடம் மூன்று கதைகளை முதலில் சொல்லி உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அதில் முதல் கதையை தற்போது படமாக எடுத்து வருகிறாராம் இந்த படத்தில் அஜித் இளமை மற்றும் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதலில் வயதான தோற்றத்தை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம். அதை முடித்துவிட்டு பின் இளமையான அஜித்தை வைத்து படத்தை எடுக்கலாம் என கூறப்படுகிறது இதனால் ரிவர்ஸ் கியர் போட்டு அஜித்தின் 61 படத்தை எடுக்க இருக்கிறார் ஹெச். வினோத்.