மலையாள நடிகையை தூண்டில் போட்டு பிடித்த AK 61 படக்குழு – அஜித்துக்கு செம்ம பொருத்தமான ஜோடி.?

தமிழ் சினிமா உலகில் அஜித் அதிக தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் ரசிகர்களின் நாயகனாக வலம் வருகிறார் அஜித்குமார் ரசிகர்கள் தான் எது செய்தாலும் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவரும் உணர்வுகளால் வந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்த  அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை நல்ல முறையில் கொடுத்து அசத்துகிறார்.

அப்படி அண்மையில் வெளியான அஜித்தின் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கொண்டாட வைத்தது அதை நிறுத்தக் கூடாது என்பதற்காக இந்த வருடமே இன்னொரு படத்தையும் கொடுக்க ரெடி ஆகி விட்டார் அஜித் மூன்றாவது முறையாக ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி  மையமாக உருவாக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்திற்காக அஜித் அதிரடியாக உடல் எடையைக் குறைத்துள்ளார் மேலும் இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும் அஜித்துடன் கைகோர்க்கும் தகவல்கள் உலா வருகின்றன ஆனால் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்துக்கு நாயகியாக இந்த படத்தில் யார் நடிப்பார் என தெரியாமல் இருந்து வந்தது. ஆனால் பல்வேறு புரளிகள் கிளம்பின பாலிவுட் நடிகை தபு நடிக்க இருக்கிறார் என்ற தகவல் எல்லாம் வெளிவந்தன. ஆனால் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை இப்பொழுது கூட ஒரு தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது AK 61 படத்தின் கதாநாயகி மலையாள நடிகை மஞ்சு வாரியர் என தகவல் வெளியாகிறது அஜித்தின் அண்மைகால  அஜித்துக்கு இணையான வயதான நடிகைகளை நடிக்க வைக்கின்றனர் அந்த வகையில் பார்த்தால் AK 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment