AK 61 : படத்தில் அஜித்துடன் ஜோடி சேரப்போகும் பிரபல தெலுங்கு பட நடிகை.!

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ஆண் ரசிகர்களை வைத்து ஆட்சி செய்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவில் எவ்வளவு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறாரோ அதை விட அதிக தோல்வி படங்களை கொடுத்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நேர்மையான எண்ணம் செயல்பாடு ஆகியவை இவர்களுக்கு பிடித்து போனதால் இன்றும் அவர் உச்ச நட்சத்திரமாக நிற்கிறார்.

அஜித் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது கூட வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாகயிருந்தது. ஆனால் கொரோனா 3 வது அலை தீவிரமடைந்துள்ளதால் அது மக்கள் மற்றும் ரசிகர்களை பெரிதளவு பாதிக்கும் என அஜித்தும், வலிமை படக்குழுவும் யோசித்து படத்தை வேறு ஒரு தேதியில் வைத்துக் கொள்ளலாம் என பின்வாங்கியது.

வலிமை படம் பிரச்சினைகள் எல்லாம் முடிந்து நல்ல நாட்களில் வெளிவந்தால் போதும் என படக்குழு யோசித்து உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜீத் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார் அதாவது இந்த வருடத்தில் இரண்டு திரைப்படங்களை கொடுத்து வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடிவெடுத்துள்ளார்.

தனது 61 – வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் இந்த படத்தின் பூஜை வெகு விரைவிலேயே போட்டுவிட்டு இன்னும் ஆறு, ஏழு மாதங்களில் படத்தை முழுவதுமாக எடுத்து வெளியிட முனைப்பு காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. வலிமை, நேர்கொண்டபார்வை ஆகிய படங்களில் பணியத்த படக்குழுவுடன் மீண்டும் அஜித் இணைந்துள்ளதால் அடுத்த படத்திற்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் 61 திரைப்படத்தில் எந்த நடிகையை வளைத்து போடலாம் என படக்குழு யோசித்து வருகிறது. அந்த வகையில் முதலாவதாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வந்த நடிகை பூஜா ஹெக்டேவை இழுத்துப்போட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment